கோவை மாவட்டத்தில் போலீசார் பயன்படுத்தும் 13 ரோந்து வாகனங்களில் தனியார் நிறுவன பங்களிப்புடன் அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன .இந்த கேமராக்கள் இரவிலும் துல்லியமாக படம் பிடிப்பதுடன் ஒரு மாதம் வரையிலான தரவுகளை சேமித்து வைக்கும் அளவிற்கு ஆற்றல் கொண்டது.இந்த நவீன கேமராக்கள் பொருத்தப்பட்ட வானங்களுடன் ரோந்துபணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி தொடக்க விழா கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. இதை கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு வாகனத்திலும் முன்பக்கம் மற்றும் பின்பக்கத்தில் தலா ஒரு கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்த ரோந்து வாரங்கள் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்படும். மாநகர் பகுதி தவிர்த்து மாவட்டத்தில் மொத்தம் 11 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில் 10, 200 கேமராக்கள் செயல்பாட்டில் உள்ளன.மீதமுள்ள 800 கேமராக்கள் செயல்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை ஊரக பகுதியில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும்9 பேர் கண்டறியப்பட்டு எச்சரிக்கப்பட்டனர்.. அதன் பின்னர் அவர்கள் அது போன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்வதில்லை. அதிவேகமாக வாகனங்களை இயக்கக்கூடிய 35 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு இரும்பு தடுப்புகள் வைத்து வாகனங்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2.500 ஆன்லைன் மோசடி வழக்குகள் பெறப்பட்டுள்ளன. இதில் ரூ 1 கோடியே 60 லட்சம் ரூபாய் மீட்க்கப்பட்டு உரியவர் களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது .குறிப்பாக ஐ.டி. ஊழியர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடி நடக்கிறது எனவே ஐ.டி. ஊழியர்களிடம்இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் .கோவை கேரள மாநில எல்லை பகுதியில் மொத்தம் 14 சோதனை சாவடிகள் உள்ளன. கேரளாவில் மாவோயிஸ்ட நடமாட்டம் காரணமாக ஒரு சோதனை சாவடிக்கு ஒரு நேரத்திற்கு தலா 5 போலீசார்ர் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நக்சல் தடுப்பு குழுவினர் மலை கிராமங்களில் ரோந்துபணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவையில் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து 470 கடைகளில் சோதனை நடத்தப்பட்டன. இதில் 175 கடைகளுக்கு தலா ரூ5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது 16 கடைகள் சீல்வைக்கப்பட்டுள்ளது. . 26 கடைகளுக்கு சீல் வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.