சென்னை மற்றும் தமிழகம் முழுவதிலும் ஒரு மோசடி கும்பல் அலையோ அலைந்து திரிந்து வேலையில்லாமல் வாயை பிளந்து கொண்டு பணத்தைக் கொட்டிக் கொடுக்க நாங்கள் ரெடி வேலையை வாங்கி கொடுக்க நீங்கள் ரெடியா என அலையும் இளித்த வாயர்களை குறி வைக்கும் ஒரு பிராடு கும்பலை பற்றி ஒரு சுவாரசியமான சம்பவம்..
சென்னை எர்ணாவூர் பஜனை கோயில் தெரு தாமோதரனின் மகன் ஸ்ரீகாந்த் வயது 28 இவர் எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் சும்மா இருந்து வருகிறார். இவருடைய அப்பா மின்சார வாரியத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றார். இவரை சந்தித்த குற்றவாளி பிராடு ஆசாமி தமிழ் என்கிற தீபக் வயது 28 தகப்பனார் பெயர் குணசேகரன் பிருந்தாவன் நகர் மூன்றாவது தெரு எர்ணாவூர் சென்னை இவனுடைய அப்பா சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில்இளநிலை பொறியாளராக வேலை செய்து ஓய்வு பெற்றவர் குற்றவாளி தீபக் என்கிற தமிழ் பி லின்ட்ரோ என்ற தனியார் நிறுவனத்தில் டேட்டா அனலைஸ் ஆக வேலை செய்து வருவதாகவும் ஸ்ரீநாத்திற்கு காக்நிசான் கம்பெனியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் நிரந்தர வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி மாதம் சம்பளம் ரூபாய் 80 ஆயிரம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி 20 லட்ச ரூபாயை ஏமாற்றி வாங்கி உள்ளான் மேலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும் நீ செலவு செய்த பணத்தை ஒரே வருடத்தில் மீட்டு விடலாம் மேலும் நல்ல வேலையில் இருந்தால் தான் பெண் கொடுப்பார்கள் என இனிக்க இனிக்க பேசி உள்ளான் மேலும் காக் நிஷான்ட் வேலை விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும் என ஆசை வார்த்தை கூறி காக்நி சான் ட் ஆபீஸ் வாசலின் வெளியே ஸ்ரீநாத்தை நிற்க வைத்து விட்டு உள்ளே எச் ஆர் மேனேஜரை பார்த்துவிட்டு வருவதாக பொய் சொல்லி வேலைவாய்ப்பு ஆர்டர் விரைவில் வந்துவிடும் என்று சொல்லி விமானத்தில் பறப்பான் பிறகு சென்னை மவுண்ட் ரோடில் உள்ள காக் நிசான்ட் கம்பெனியின் போலியான எம்ப்ளாய் ஐடி கார்டு தயார் செய்து கொடுத்துள்ளான் ஆனால் வேலை வாய்ப்பும் வாங்கி தராமல் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதால் மோசம் போய் விட்டோமே என்ற வேதனையில் ஸ்ரீநாத் அழுது கொண்டு ஆவடி போலீஸ் கமிஷனர் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்து ஏமாற்றப்பட்டதை சொல்லி அழுதார் அவரது உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாளை அழைத்து கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் கூடுதல் துணை ஆணையர் ஸ்டீபன் மற்றும் காவல் உதவி ஆணையாளர் மேற்பார்வையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இ. ராமசுந்தரம் வழக்கு பதிவு செய்து ஃபிராடு தமிழ் என்கிற தீபக் கை கைது செய்தார் குற்றவாளியை கைது செய்யும் போது சார் அமெரிக்க அதிபரின் உதவியாளர் வேலையை கூட என்னால் வாங்கித் தர முடியும் சம்பளம் ஜாஸ்தி என்று பீலா விட்டுள்ளான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமசுந்தரம் எதற்கும் மயங்காமல் குற்றவாளியை துணிச்சல் உடன் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார் குற்றவாளி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்