கோவை மத்திய சிறை கைதிகளுடன் நீதிபதி கலந்துரையாடல்..!

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான கே. ரமேஷ் கோவை சிறையில் நேற்று ஆய்வு செய்தார். வருகிற 18-ஆம் தேதிகைதிகளுக்கு நடைபெற உள்ள குறை தீர்ப்பு கூட்டம் குறித்து கைதிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தண்டனை கைதிகளுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்பட்டு வரும் சட்ட உதவிகளை எடுத்து கூறினார்.பின்னர் பெண்கள் சிறைக்கு சென்ற நீதிபதி ரமேஷ் அங்கும் கைதிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .இந்த கலந்துரையாடலின் போது சிறைத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.