கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 49 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பதற்றமான நிலை நீடிக்கிறது.
இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்ட்ம இன்று காலை தொடங்கியது, கேள்வி நேரத்தின் ஆரம்பிக்கும் போதே அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்சனையை எழுப்பினர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம், முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என முழக்கம் எழுப்பினார்.
தொடர்ந்து ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எழுதப்பட்ட வாசகத்தை பேனரை காண்பித்து சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். இதனால் சட்டசபையில் கூச்சல் குழுப்பம் உருவானது. சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு உறுப்பினர் அமைதி காக்க வலியுறுத்தினார். ஆனால் தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பிரச்சனை எழுப்பியதால் அமளியானது நீடித்தது.கேள்வி நேரத்திற்கு பிறகு கள்ளக்குறிச்சி தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக தொடர்ந்து அதிமுக சார்பாக முழக்கம் எழுப்பப்பட்டது சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளை சட்டசபையில் இருந்து வெளியேற்ற சபாயாகர் உத்தவிட்டார். இதனையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று வெளியேற்றினார். சட்டசபையின் வெளியேவும் அதிமுவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.