கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். விவசாயி. இவர் திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். இந்த நிலையில் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். அதில் அவருடைய புகைப்படம் விவரம் மற்றும் செல்போன் எண்ணும் கொடுத்திருந்தார். அந்த நிலையில் அந்த வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொண்டார். அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் தனக்கு 28 வயது என்றும், திருமணத்துக்காக வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறினார் .தொடர்ந்து பேசி அந்த பெண் திருமண தகவல் மையத்தில் உங்களது விவரங்களை பார்த்தேன் .எனக்கு உங்கள் மிகவும் பிடித்துள்ளது.நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். என்று பேசினார். அந்த வாலிபருக்கும், அந்த பெண்ணை மிகவும் பிடித்து விட்டதால் 2 பேரும் தொடர்ந்து பேச ஆரம்பித்தனர். பின்னர் வாட்ஸ் அப் மூலம் பேசத் தொடங்கி 2 பேரும் அவ்வப்போது வீடியோ காலில் பேசி வந்தனர்.. அப்போது 2பேரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர் இந்த நிலையில் திடீரென்று அந்தப் பெண் அந்த வாலிபருடன் தனது அக்காவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது. இதனால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம். அவரது சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது. என்னிடம் அவ்வளவு பணம் இல்லை .அக்காவை காப்பாற்றினால் தான் நம் திருமணம் நடக்கும்என்று கூறி அழுது உள்ளார் .அவர் அழுததும் மனம் இறங்கி அந்த வாலிபர் நாம் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் தானே? என்று அவர் கேட்ட பணத்தை உடனே அனுப்பி உள்ளார். பின்னர் பல்வேறு தவணைகளில் ரூ 7 லட்சத்து 12 ஆயிரம் அனுப்பியுள்ளார். இதனால் தொடர்ந்து அந்த பெண்ணும் அவரும் பேசி வந்தனர் .இந்த நிலையில் திடீரென்று அந்தசெல்போன் எண்ணை அந்தப் பெண் “பிளாக் ” செய்துவிட்டார். இதனால் அந்த பெண்ணிடம் பேச முடியவில்லை. தினமும் பேசிய பெண் ஏன்? தனக்கு தொடர்பு கொள்ளவில்லை என்று குழப்பம் ஏற்பட்ட து.பிறகு அவர் அந்தப் பெண் கூறிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகவரிக்கு சென்று நேரில் விசாரித்தார். அப்போது அந்த முகவரியில் அப்படி ஒரு பெண் யாரும் இல்லை என்பதும் அந்த பெண் கூறிய முகவரி போலியானது என்பதும் தெரிய வந்தது. உடனே அவர் இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணின் செல்போன் ,வங்கி கணக்கு போன்ற விவரங்களை வைத்துவிசாரணநடத்தியதில் அதில் அவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி சேர்ந்த பிரியா (வயது 32)என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது பிரியா தலைமறைவாகி விட்டார்.இதை யடுத்து அவரை போலீசார் தீவிரமாகதேடி வந்தனர் .இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ளஒரு வீட்டில் பதுங்கி இருந்தஇருந்த பிரியாவை போலீசார் நேற்று கைது செய்தனர் .அவரை கோவைஅழைத்து வந்து நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தினர்.பின்னர் அவர் கோவை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்..இதுகுறித்துபோலீஸ் அதிகாரிகள்கூறியதாவது:- பிரியாவுக்கு 23 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது . அவரது முதல் கணவர் இறந்துவிட்டார். பின்னர் இரண்டாவது ஒருவரை திருமணம் செய்தார். இரண்டாவது கணவர் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது .இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவரது 2 -வது கணவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் அவர் 3 -வது திருமணம் செய்தார். அவருடன் வாழ்க்கையில் சரியாக அமையவில்லை. எனவே அவரை விட்டுவிட்டு சேலத்தைச் சேர்ந்த ஒருவரை 4 – வது திருமணம் செய்து கொண்டார். தனது 4-வது கணவருடன் சேர்ந்து தான் திருமணம் செய்து கொள்வதாக கூறி வாலிபர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் பொள்ளாச்சி வாலிபரிடம் ரூ 7 லட்சமும், ஈரோட்டை சேர்ந்த ஒரு வாலிபரிடம் ரூ.4 லட்சமும் ஏமாற்றியுள்ளார். தொடர்ந்து பலரிடம் அவர் இதுபோன்று பேசி ஏமாற்றியதாக கூறப்படுகிறது..பிரியாவின் கணவர் தலைமறைவாகி விட்டார் .பிரியா இளைஞர்களிடம் பேசும்போது தனக்கு 25 வயது என்றும் வீடியோ கால் பேசும்போது ” புல் மேக்கப் ” போட்டு தான் பேசுவாராம். அப்போது இளைஞர்களை சுண்டி இழுக்கும் வகையில் இனிக்க இனிக்க பேசி கிறகடிப்பாராம். எனவே தற்போது சிறையில் இருக்கும் பிரியாவை காவல் எடுத்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன் பின்னர் தான் இன்னும் எத்தனை பேரை ஏமாற்றினார்? எவ்வளவு பணம் மோசடி செய்தார். என்ற முழு விவரங்களும் தெரிய வரும்
திருமண ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.7 லட்சம் மோசடி- பலரை ஏமாற்றி திருமணம் முடித்த கல்யாண ராணி கைது..!
