கோவை மத்திய சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கக்கூடிய இடத்தில் உள்ள மரத்தில் நேற்று ஒரு வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அனுப்பர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி அழகர்சாமி, ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அவரது சட்டைப் பையில் ஆதார் கார்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம் அவர் கர்நாடக மாநிலம் மாண்டியா பக்கம் உள்ள கோப்பகுபிளியை சேர்ந்த கிருஷ்ண கவுடா மகன் சுகேஷ் (வயது 24) என்பது தெரிய வந்தது. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..