சென்னை கிண்டி மடுவங் கரை காதர் இப்ராஹிம் மனைவி மொய்தீன் பாத்திமா பிவி ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் கமிஷன் ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் சந்தித்து அம்பத்தூர் கொரட்டூர் கள்ளிகுப்பம் பகுதியில் ஹாஜி நகர் ஏரியாவில் 2347 சதுர அடி கொண்ட வீட்டுமனை ஏழுமலை நாயக்கர் மற்றும் தனசேகர் இடமிருந்து கிரயம் பெற்றுள்ளதாக கூறியுள்ளார். இதை கேடி பத்மநாபன் மற்றும் கூட்டாளிகள் ஒன்று சேர்ந்து கொண்டு மொகிதீன் பாத்திமா பிவி போல் ஆள்மாறாட்டம் செய்து போலியான பத்திரங்கள் மூலம் பாலகிருஷ்ணன் பிரபு வேலு ஆகியோருக்கு விற்பனை செய்து உள்ளார். இதன் மதிப்பு ரூபாய் 80 லட்சம் ஆகும் . இந்த இடத்தை மீட்டுத்தர கோரி உள்ளார் . இந்த புகார் குறித்து துணை ஆணையர் பெருமாள் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்கு பதிந்து குற்றவாளி நம்பர் ஒன் கேடி தலைமறைவாக இருந்த பத்மநாபன் வயது 49 தகப்பனார் பெயர் ஜெயராமன் சோலை மாநகர் செங்குன்றம் என்பவனை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்..