கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி… நீலகிரி எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

கேரளா மாநில எர்ணாகுளம் இடத்தில் கிறிஸ்தவர்களின் யூத வழிபாட்டு தளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக நீலகிரி கூடலூர் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள 10 சோதனை சாவடிகளும் உசார்படுத்தப்பட்டு காவலர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்,மேலும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சுந்தரவடிவேல் நேரில் சென்று பார்வையிட்டு கேரள மாநில எல்லையை ஒட்டி உள்ள சோதனை சாவடிகளில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது, கூடலூர், உதகை, குன்னூர் கோத்தகிரி பார்லியார் போன்ற அனைத்து பகுதிகளிலும் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கும் பணிகளை நீலகிரி காவல்துறையினர் செய்து வருகின்றனர், காவல் துறையினர் மோப்ப நாய்கள் அநேக இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர், மற்ற மாநிலங்களில் இருந்து வரக்கூடிய அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் தீவிர சோதனைக்குப் பிறகு வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அனைத்து இடங்களிலும் காவல்துறையின் பாதுகாப்பு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன,.