வாளையாறு சோதனை சாவடியில் கேரள லாட்டரி டிக்கெட் விற்றவர் கைது..!

கோவை மதுக்கரை பக்கம் உள்ள வாளையாறு சோதனைசாவடி அருகே கே.ஜி.சாவடி போலீசார் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த சிமோய் ராஜ் (வயது49 ) என்பது தெரியவந்தது. இவரிடமிருந்து 35 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..