கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் வீரபாண்டி ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் ( வயது 47) தண்ணீர் சப்ளை செய்து வந்தார்.இவர் அங்குள்ள டி.வி.எஸ். நகர் சந்திப்பில் நின்று கொண்டு கேரளா லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்தார். இவரை துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் பழனியாண்டி நேற்று மாலை கைது செய்தார். இவரிடமிருந்து 727 கேரளா லாட்டரி டிக்கெட், ரூ 200 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..