கோவை : பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பழனி நேற்று பொள்ளாச்சி பகுதியில் ரோடு சுற்றி வந்தார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஆத்து பொள்ளாச்சி, நடராஜ் கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி லட்சுமி ( வயது 40) என்பது தெரிய வந்தது. இவரிடம் இருந்து 24 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.