கோவையில் 300 பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்த கேரளா வாலிபர் கைது
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கார பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ் கருண். இவர் ஜென் டூ ஜென் என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில் தொடங்கினார். சஜீவ் கருண் தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலை பெரிய அளவில் நடத்தி வருவதாகவும் தனது நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாகவும் தொழிலதிபர்கள் உட்பட பலரிடம் ஆசை வார்த்தைகளை கூறினார். இதை நம்பி சூளேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் இவரது நிறுவனத்தில் ரூபாய் 96 லட்சத்து 56 ஆயிரம் முதலீடு செய்தார். ஆனால் லாபத்தில் பங்கு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணத்தை திரும்பி கொடுக்கவில்லை. இதே போல் பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கு ரூபாய் 31,50,000 முதலீடு செய்துள்ளார். அவருக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கவில்லை இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து அவர்கள் இரண்டு பேரும் கோவை மாவட்டம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சஜீவ் கருண் இதேபோல் கோவை மாவட்டத்தில் 300 பேரிடம் கோடி கணக்கில் மோசடி செய்தது தெரியவந்தது இதை தொடர்ந்து தனிப்பட்ட கேரள மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த சஜீவ் கருணை கைது செய்தனர். இவர் கேரள மாநிலத்தில் இதே போல் பலரிடம் ரூபாய் 110 கோடி மோசடி செய்துள்ளது அங்குள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 85 வழக்குகள் பதிவாகி இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கைதுயான சஜீவ் கருண் மீது நம்பிக்கை மோசடி உள்பட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கோவை போலீசார் சிறையில் அடைத்தனர்.