கோவை மாவட்டம், ஆனைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17 வயது சிறுமியை கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆனைமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணி@மணிகண்டன்((வயது 26) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ்
கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில், விசாரணை முடிவுபெற்று வழக்கின் எதிரியான மணி@மணிகண்டனுக்கு 15 வருடம் சிறை தண்டனையும் மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதமாமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.மேலும் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலரை
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாராட்டினார்.