வேறொருவர் இடத்தை தனது இடமென ஏமாற்றி ரூ.65 லட்சம் மோசடி செய்த கில்லாடி கேடி கைது.!!

சென்னையை அடுத்த போரூர் கொளப்பாக்கம் கோவூர் மேக்ஸ் வொர்த் நகர் பேஸ் 1இல் வசிப்பவர் மதிவாணன். இவரது மனைவி வித்யா வயது 35. இவர் மதனந்தபுரம் மாதா நகரில் ரூபாய் 65 லட்சம் கொடுத்து 1900 சதுர அடி இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த இடம் சம்பந்தமாக தென் சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தின் பேரில் விசாரணைக்கு ஆஜரான போது நீங்கள் இடம் வாங்கிய ஒரிஜினல் ஓனர் சுப்பராய்டு பெயரை தவறாக பயன்படுத்தி ஆள் மாறாட்டம் செய்து போலியான பொது அதிகாரம் பத்திரம் தயாரித்து உங்களை ஏமார்ந்த இளித்த வாயர் வித்யா என ஏமாற்றி உள்ளனர் என மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் கூறியுள்ளனர். அதன் பேரில் வித்யா அழுது கொண்டே ஆவடி போலீஸ் கமிஷனர் ஆக்சன் நாயகன் கி. ஷங்கரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுத்து அழுது புலம்பியுள்ளார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரை அழைத்து குற்றப்பிரிவு நி ல பிரச்சனை தீர்வு பிரிவின் கீழ் தயவு தாட்சனை இன்றி அதிரடி நடவடிக்கை எடுக்க சங்கர் உத்தரவு பிறப்பித்தார் .அதன் பேரில் அதிரடி போலீசார் வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வித்யாவை ஏமாற்றி ரூபாய் 65 லட்சத்தை மோசடி செய்த கில்லாடி கேடி ராகுல் என்கிற பிரியன் குமார் வயது 33 தகப்பனார் பெயர் சுகுமாரன் கர்ணன் தெரு முகப்பேர் மேற்கு சென்னை என்பவனை தலை மறைவாக இருந்தபோது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் கி டுக்கி பிடி போட்டு அதிரடியாக கைது செய்தார் . குற்றவாளி ராகுல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரிடம் சார் என்னை கைது செய்து விடாதீர்கள் மோசடி செய்த பணத்தில் உங்களுக்கு பாதி எனக்கு மீதி என பேரம் பேசினான். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் எனக்கு பணம் வேண்டாம் நான் உனக்கு மைசூர் லட்டு தருகிறேன் என போலீஸ் பாணியில் பேசி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கை பதிவு செய்தார். கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தில் முறைப்படி ஆஜர்படுத்தப்பட்ட பின் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். குற்றவாளியை அதிரடியாக கைது செய்த இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரை போலீஸ் கமிஷனர் சங்கர் வெகுவாக பாராட்டினார்..