மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் ரம்மியாக உள்ளது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்தாண்டு கண்காட்சி நடத்தப்படுவதற்கான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் கொடைக்கானலில் நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் 26ம் தேதி துவங்கும் மலர்க் கண்காட்சி ஜூன் 2ம்தேதி வரை நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் அமைச்சர்கள் இ.பெரியசாமி,அர.சக்கரபாணி,ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
கோடை விழாவில் சிறப்பம்சமாக விளையாட்டு போட்டிகள், படகு போட்டிகள்,நாய் கண்காட்சி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்தார்.