சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் வேறொரு இடத்தை தன்னுடைய இடம் என்று கூறி அலையும் பிராடு கும்பலை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கைது செய்து உள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு
ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் சென்னை அண்ணாநகர் டவர் மெட்ரோ ஜோன் அபார்ட்மெண்ட் பகுதியில் வசிக்கும் அருணாச்சலம் மகன் ஜெயச்சந்திரன் கொடுத்துள்ள புகார் மனு ஏ பி என் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் வேர் ஹவுஸ் என்ற தொழிலை செய்து வருவதாகவும் தன்னுடைய வீட்டின் அருகே பராக் குடா என்பவன் குடியிருந்து வருகிறான். அவன் மூலம் சுரேந்தர் அறிமுகமானான். எனக்கு ஏதாவது இடம் வாங்கலாம் என்று ராகுடாவிடம் கூறியிருந்தபோது சுரேந்தர் என்பவன் பொது அதிகாரம் பெற்ற திருமுல்லைவாயல் பாலாஜி நகரில் 7200 சதுர அடி இடம் இருப்பதாகவும் பேசினான். அந்த இடத்திற்கான மதிப்பு 3 கோடியே 66 லட்சம் என விலை பேசி அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் எனது தந்தையார் அருணாச்சலம் பெயரில் பத்திர பதிவு கிரையம் செய்தேன். இதற்கு சாட்சிகளாக சுரேந்திரனின் நண்பனான பாபு மற்றும் பராக்குடா ஆகியோர் கையெழுத்து போட்டனர். நாங்கள் வாங்கிய இடத்திற்கு காம்பவுண்ட் சுவர் கட்ட செல்லும்போது அடையாளம் தெரியாத நபர் மேற்படி இடத்திற்கு சொந்தமானவன் நாராயணன் என்பவருக்கு சொந்தமானது. இந்த இடத்தை தரை வாடகைக்கு குடியிருப்பதாக கூறினார். இந்த இடமானது நாராயணனின் மனைவி வள்ளியம்மை பேரிலும் உமையாள் பெயரிலும் உலகம்மை என்பவர் பெயரிலும் நாராயணனின் சகோதரிகளுக்கு சொந்தமானது என்று கூறினார்.2016 ஆம் ஆண்டு அதே இடம் குமார் என்பவர் திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுரேந்திரன் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறை க்கும் சென்றனர். சிறையில் இருந்து வெளியே வந்த அந்த கேடிகள் அதே சொத்தைக் கொண்டு ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சுரேந்திரன் பாபு மற்றும் கமல் ஆகியோர் ஆள் மாறாட்ட நபர் மூலம் போலியான ஆவணங்களை தயாரித்து அதை எனக்கு விற்பனை செய்து லாபம் அடைந்துள்ளனர். ஆள் மாறாட்டம் மூலம் போலியான ஆவணங்கள் தயாரித்து ஆட்களை செட்டப் செய்து விற்பனை செய்ததை கண்டுபிடித்துள்ளார். ஆள் மாறாட்டம் மூலம் போலி பத்திரங்களை கொடுத்து ரூபாய் 3 கோடியே 66 லட்சத்தை ஏமாற்றிய கேடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் நில பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.காவல் ஆணையாளர் சங்கர் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் நேரடி மேற்பார்வையில் குற்றவாளிகள்1. சுரேந்திரன் வயது 53. தகப்பனார் பெயர் மல்லங்கருப்பன் பஜனை கோவில் தெரு, மண்ணூர்பேட்டை சென்னை.2.பாபு வயது 58.தகப்பனார் பெயர் ராமச்சந்திரன் பாரதியார் தெரு சக்தி நகர் பாடி சென்னை.3. கமல் வயது 46.தகப்பனார் பெயர் ராஜு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அயப்பாக்கம் சென்னை.4. ப ராக் குடா வயது 46. தகப்பனார் பெயர் தாக்கூர் தாஸ்குடா மேடவாக்கம். டே க் ரோடு. பார்சன்கார்டன் தெரு உமா காம்ப்ளக்ஸ் கெல்லிஸ் சென்னை.5. ஹரிகுமார் வயது 50. தகப்பனார் பெயர் பூபாலன். சட்டனநாயக்கர் தெரு சூளை சென்னை.6. சையது முகமது பாரூக் வயது 50.தகப்பனார் பெயர் சையது முகமது. கண்ணப்பர் தெரு அமைந்தகரை சென்னை. ஆகிய ஆறு பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்குப் பதிவுடன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.