கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி சுமதி ( வயது 60) செல்வராஜ்க்கு சொந்தமான 23 சென்ட் நிலம் சிங்காநல்லூரில் உள்ளது. 3-12 -2005 அன்று செல்வராஜ் இறந்துவிட்டார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி ( வயது 85) அவரது மனைவி அம்மாசி அம்மாள் ( வயது 80) ஆகியோர் போலி தஸ்தாவேஜுகள் தயாரித்து அந்த நிலத்தை மோசடி செய்து விட்டார்களாம் .அதில் 8 சென்ட் நிலத்தை திலகவதி என்பவருக்கு விற்பனை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது . இது குறித்து சுமதி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் ராமசாமி அவரது மனைவி அம்மாவாசை அம்மாள் ஆகியோர் மீது மோசடி, கூட்டு சதி உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
நிலம் மோசடி…. கோவை தம்பதி மீது வழக்கு..!
