கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண் .இவர்கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வருகிறார். அப்போது அவரை மேட்டுப்பாளையம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த வக்கீல் அப்துல் ரசாக் ( வயது 47)என்பவர் பின் தொடர்ந்து ஆபாச செய்கை காட்டி வந்ததாக தெரிகிறது. இது குறித்து கல்லூரி மாணவி மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் செய்தார். அதன் பேரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து சிறையில் இருந்து வந்த அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி ரயிலில் செல்லும் போது மீண்டும் பின் தொடர்ந்து வந்து ஆபாச செய்கை காட்டி அச்சுறுத்தி உள்ளார் .இந்த நிலையில் மேட்டுப்பாளையம் 6 முக்கு பகுதியில் உள்ள ஒரு பேக்கிரிக்கு கல்லூரி மாணவி அவரது அண்ணனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வக்கீல் அப்துல் ரஜாக் பாட்டுப்பாடியும், ஆபாச செய்கை காட்டியும் மாணவியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் . அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காமராஜர் வழக்கு பதிவு செய்து வக்கீல் அப்துல் ரசாக் மீண்டும் கைது செய்தார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
கோவை கல்லூரி மாணவியிடம் ஆபாச சைகை காட்டி மிரட்டிய வக்கீல் மீண்டும் கைது..!
