கோவை நீதிமன்ற வளாகத்திலேயே வக்கீல் பைக் திருட்டு..!

கோவை அருகே உள்ள சோமையம்பாளையம், விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் அஜய் பிரபு ( வயது 26) கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்..இவர் நேற்று நீதிமன்ற வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தனது புல்லட் பைக்கை நிறுத்தி இருந்தார். கோர்ட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து வக்கீல் அஜய் பிரபு ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். நீதிமன்ற வளாகத்தில பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததும் இந்த திருட்டு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..