கோவை : ஓசூரில் நீதிமன்ற வளாகத்தின் அருகில் வக்கீல் கண்ணன் என்பவர் நேற்று பட்டப்பகலில் அரிவாளால் வெட்டப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு – புதுச்சேரி மாநில வக்கீல்கள் சங்கம் கூட்டுக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் வக்கீல்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடைபெறுகிறது. தென்னிந்திய வக்கீல்கள் மாநாட்டுக்கு வருகை தந்த தமிழக சட்ட அமைச்சரிடம் வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளோம். உடனடியாக வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய – மாநில அரசுகள் நிறைவேற்றிட வலியுறுத்தி இன்றும் ( வியாழன்) நாளையும் ( வெள்ளி) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் அனைவரும் நீதிமன்ற புறக்கணிப்பில்ஈடுபட வேண்டும் என கூட்டுக்குழு கேட்டுக் கொள்கிறது .இந்த சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி விரைவில் பொதுக்குழு போராட்டத்தை அறிவிக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது . இந்த அறிவிப்பை தொடர்ந்து கோவை, திருப்பூர் ,ஈரோடு நீலகிரி மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுஉள்ளனர்..
வக்கீல்கள் இன்றும் நாளையும் கோர்ட் புறக்கணிப்பு.!!
