முதல்வர் இந்த ஒரு வருடம் அப்பாவாக இருக்கட்டும் – டிடிவி தினகரன் கிண்டல்..!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் காந்திமார்க்கெட் ஸ்ரீ மீனாட்சி மகாலில் நடைபெற்றது. நிகழ்விற்கு முன்னதாக டிடிவி தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
திமுக ஆட்சி காலத்தில் அறிவியல் பூர்வமான ஊழல்கள் நடைபெறுவது வாடிக்கை.
டாஸ்மாகில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை அனைவரும் அறிவார்கள்.
திமுக அரசு பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு போய் சேருகிறதா?
என்பதை ஊடகங்களும், எதிர்கட்சிகளும், பொதுமக்களும் தான் கண்காணிக்க வேண்டும்
டெல்லியில் கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கினார். ஆனால் அவர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிறகு மத்திய அரசின் பழிவாங்கும் போக்கு என்று பிரச்சாரம் செய்தாலும் அவரது கட்சி படுதோல்வியடைந்தது. வருகிற 2026ம் ஆண்டு தேர்தலில் அதே நிலைமை திமுகவிற்கும் ஏற்படும். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோது தமிழகம் கடனில் மூழ்வதாக கூறிய திமுக, தற்போதைய நான்காண்டு கால ஆட்சியில் 4.50 லட்சம் கோடி
கடனை வாங்கியுள்ளார்கள். அந்தப் பணத்தை என்ன செய்தார்கள்? அந்தப் பணம்
மக்களிடம் சென்று சேர்ந்ததா? என்பது கேள்விக்குறி தான். வருகிற 2026 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து ஊழல்களையும் ஒழித்து ஏழை மக்களுக்கு, விவசாயிகளுக்கு, ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு மருத்துவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் சுபிட்சமான ஆட்சியை கொடுப்போம்.
திமுக என்ற தீய சக்தி வீழ்த்தப்பட வேண்டும் என்றால் திமுகவிற்கு எதிராக உள்ள கட்சிகள் அனைத்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள் .தேசிய ஜனநாயக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கிறது.
முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அளித்த பேட்டியில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்புள்ளார். இதன் மூலம் 90 சதவீத தொண்டர்களின் மன ஓட்டத்தை தெளிவுபடுத்தி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி போன்ற ஒரு சிலர் தவிர மற்ற அனைவரும் பாஜகவுடன் அதிமுக இணைவதை விரும்புகின்றனர்.
பழனிச்சாமி தலைமையிலான அதிமுக பலவீனம் அடைந்துள்ளது. அவர் திமுக
வெற்றிக்கு பாடுபடுகிறார். இதனை மனதில் கொண்டு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
நாங்கள் ஒரு அணியில் இணைய முடியும். ஆனால் ஒரு கட்சியாக இணைய முடியாது.
எடப்பாடி பழனிச்சாமியை அதிகாரம், பதவி வெறி பாடாய் படுத்துகிறது.
முன்னாள் முதல்வர் அண்ணா 1967 ல் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாடு இரு மொழிக் கொள்கை கொண்டு வந்தார். காலப்போக்கில் அனைத்து இந்தியாவிற்கும் இணைப்பு மொழியாக ஒரு பொதுமொழி உருவாக வேண்டும், அதுவரை ஆங்கிலம் தொடர வேண்டும் என்றார்.
அண்ணா தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவர் மூன்றாவது மொழியாக
இந்தியை ஏற்று இருப்பார். மும்மொழி திட்டம் குறித்து அண்ணாவிடம் கருத்து கேட்ட போது,
மும்மொழி திட்டத்தை நாங்கள் ஏற்பதற்கு தயார் . ஆனால் மற்ற மாநிலங்கள் அதை பின்பற்ற வேண்டும். தற்பொழுது குஜராத்தி, மராத்தி பள்ளிக்கூடங்கள் சென்னையில் உள்ளன.
இந்தியை போதிப்பதற்கான பள்ளிக்கூடங்களை அமைய தடை இல்லை.
அண்ணா உயிரோடு இருந்திருந்தால் இந்தியா முழுவதும் இணைப்பு மொழியாக இந்தியை
உறுதியாக தமிழ்நாட்டில் அனுமதித்து இருப்பார் என்பது என் கருத்து. பழைய பண குறியீட்டை
௹ என மாற்றி இருப்பது சிறுபிள்ளைத்தனமான செயல் . தமிழ்நாடு கேட்ட நிதி வழங்கப்படுகிறது. ஆனால் திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர் . தந்தை பெரியார் சுதந்திர தினத்தை கருப்பு தினம் என கூறினார். அவரது சீடரான அண்ணா இதனை ஒத்துக் கொள்ளவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலினை, அப்பா. அப்பா என தமிழக மக்கள் கொண்டாடுவதாக கூறுகின்றனர். இந்த வருடம் அவர் அப்பாவாக இருந்துட்டு போகட்டும்.
இவ்வாறு டிடிவி தினகரன் கூறினார்.
பிறகு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த செயல் வீரர்கள் – வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் ரங்கசாமி, தலைமை நிலைய செயலாளரும் வடக்கு மாவட்ட செயலாளருமான ராஜசேகரன், கரூர் மாவட்ட செயலாளர் மாஸ் பிரபு, தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார் சத்திரம் ராமமுர்த்தி , தனசிங், கமருதீன், டோல்கேட் கதிரவன், நெல்லை லட்சுமணன், லதா, வேதாத்திரி நகர் பாலு, உமாபதி, கல்நாயக் சதீஷ், பொன்மலை சங்கர், மதியழகன், ரமணி, பெஸ்ட் பாபு, நாகநாதர் சிவக்குமார், என்.எஸ். தருண், நாகூர் மீரான், கல்லணை குணா,கோல்டு லோகநாதன், வேதராஜன், தண்டபாணி, ஜெகதீசன், கைலாஷ் ராகவேந்தர் அமமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்..