மருத்துவர்களின் பரிந்துரையின்றி சட்ட விரோதமாக மருந்து விற்பனை செய்த 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிக ரத்து.!!

சென்னை: தமிழகத்தில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி சில முக்கிய மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்தகாரணமாக 266 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில்40,000க்கும் மேற்பட்ட மருந்தகங்கள்மற்றும் நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மொத்தம் 266 மருந்தகங்களின் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். மேலும் கருத்தடை மற்றும் தூக்க மாத்திரைகளை விற்பனை செய்த 31 மருந்தகங்களின் உரிமம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.56 மொத்த விற்பனை நிறுவனங்களின் உரிமைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்வது தவறானது. குறிப்பாக, மனநலம் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளின் அத்தகைய விற்பனை, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். ஜனவரி முதல் இதுவரை பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்ட மருந்தகங்களின் உரிமங்கள் கட்டாயமாக தற்காலிகமாக அல்லது முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது,” என அவர் தெரிவித்தார். மருந்தகங்களில் விதிமுறைகளை மீறி விற்பனை செய்வதுசரியான கண்காணிப்பின்றி மக்கள் ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக இருக்கலாம் என்பதால், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கை, மருந்தகங்களில் சட்ட ஒழுங்குகளை உறுதி செய்யும் முயற்சியின் ஒரு முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது..