கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பாப்பம்பட்டி ,ஸ்ரீதேவி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் ( வயது 48) கூலி தொழிலாளி. இவர் கடந்த 7- 12 – 2020 அன்று தனது மனைவியை கொலை செய்தார். இவரை சூலூர் போலீசார் கைது செய்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட கணவர் ஆறுமுகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
சூலூரில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை..!
