கள்ளக்காதலியை கொலை செய்த வழக்கில் காதலனுக்கு ஆயுள் தண்டனை- கோவை நீதிமன்றம் தீர்ப்பு.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அசாருதீன் ( வயது 34 )இவர் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் பாரம் தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவருக்கும் மாரியம்மாள் (வயது 32) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது காதலாக மாறியது .இதையடுத்து அவர்கள் 2 பேரும் தனியாக வீடு எடுத்து தங்கினார்கள். மேலும் அவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 13 -9- 20 18 அன்று காரமடையில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு அசாருதீன், மாரியம்மாள் மாரியம்மாளின் தம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது அசாருதீன் குடிபோதையில் தம்பி மனைவியிடம் தவறாக  நடக்க முயன்றாராம். இதை மாரியம்மாள் தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அசாருதீன் மாரியம்மாள் முகத்தில் சரமாரியாக தாக்கி ஒரு கல்லில் மோத செய்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மாரியம்மாள் இறந்தார் .இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து அசாருதீனை கைது செய்தனர் .பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். இதையடுத்து காரமடை போலீசார் தீவிர விசாரண நடத்தி திருப்பூர் பகுதியில் தலைமறைவாக இருந்த அசாருதீனை கடந்த மாதம் பிடித்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை எஸ்.சி. எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி நந்தினி தேவி குற்றம் சாட்டப்பட்ட அசாருதீனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்..