ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை டெக் பொறியியல் கல்லூரி:முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதுமுக வரவேற்பு நிகழ்ச்சி

கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புதுமுக வரவேற்பு நிகழ்ச்சி 02.12.2023 (சனிக்கிழமை) அன்று கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முன்னாள் சுற்றுசூழல் துறை அமைச்சரும், கல்லூரியின் செயலாளருமான திரு. கே. சி. கருப்பணன் அவர்கள் கலந்து கொண்டனர். அவரது உரையில் மாணவர்கள் எவ்வாறு கல்வி பயின்று வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்க்கையில் முன்னேற உங்கள் பயணத்தில் உங்களுக்கு வழிகாட்ட ஆசிரியர்கள் எப்போதும் இருப்பார்கள் அதே வேளையில், மாணவர்கள் கற்றல், சரியான அணுகுமுறை மற்றும் பணிவு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் நேர்மை ஆகியவற்றில் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். முழுக் கல்லூரியின் சார்பாக தற்போதுள்ள அனைத்து மாணவர்களிடமும், புதிதாக வருபவர்களிடமும் ஒருவரோடொருவர் இணக்கமான உறவைப் பேணுவதற்கும், உங்கள் மூத்தவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரையும் மதித்து, உங்கள் பெற்றோரையும் கல்லூரியையும் பெருமைப்படுத்த வேண்டும். உங்களில் சிலர் முதன்முறையாக வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம், மேலும் புதிய சூழலில் மாற்றியமைக்க கடினமாக இருக்கலாம், ஆனால் நாங்கள் அனைவரும் உங்களுக்காக இருக்கிறோம், எங்கள் மாணவர்கள் அனைவரையும் பெரும்பாலான விளையாட்டுகளில் பங்கேற்க ஊக்குவிக்கிறோம் என்றும் மாணவர்களிடையே கலந்துரையாடினர். இதன்பின்னர் கல்லூரியில் நடத்தப்பட்ட முதல் அகமதிப்பீட்டு தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்கும், பிற கல்லூரியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்களையும் மற்றும் பரிசுகளையும் கல்லூரியின் செயலாளர் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முன்னதாக பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் துணை செயலாளர் திரு. ஜி. பி. கெட்டி முத்து, அறங்காவலர் திரு. கே. ஆர். கவியரசு, ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாடினர். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணை முதல்வர். முனைவர். சு. பிரகாசம் அவர்கள் செய்திருந்தார்.