பெரும் பரபரப்பில் லோக்சபா… தெறிக்க விட்ட பேச்சு… ராகுல்காந்தியுடன் மோடி, அமித்ஷா காரசார விவாதம்.!!

டெல்லி: லோக்சபாவில் இன்று பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று விமர்சித்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சை குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் எனப் பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார்.

இன்று லோக்சபாவில் விவாதம் அனல் பறந்தது. முதலில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டி தனது உரையைத் தொடங்கினார். இருப்பினும், படங்களை அவையில் காட்ட அனுமதி இல்லை என்று சபாநாயகர் ஓம் பிர்லா கூறிய நிலையில், சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று கூறிய அவர் பாஜகவினர் வன்முறை செய்பவர்கள் என்றார். மேலும், இந்து மதம் என்பது பயம், வெறுப்பு, பொய்களைப் பரப்பும் மதம் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சை குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் எனப் பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார். இந்துக்களை வன்முறையாளர்களாக காட்ட ராகுல் முயல்கிறார் என்ற பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பேச்சு ஒட்டு மொத்த இந்து சமுதாயத்தின் மீதான தாக்குதல் என்றும் பேசினார்.