ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு, வாலிபர் தற்கொலை

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சார்ந்த பாரதி கண்ணன். இவருக்கு ஆன்லைன் சூதாட்டம் பழக்கம் இருந்து வந்தது.இதில் ஏராளமான பணத்தை இழந்தார். இதனால் மனம் உடைந்து இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..