குறைந்த முதலீடு, அதிக லாபம் ஆன்லைன் மோசடி: 14.12 லட்சம் இழப்பு – சைபர் கிரைம் காவல் துறையிடம் புகார்
கோவை சிவாஜி காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் என்பவரை மகன் தீபக் (22). தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு மெசேஜ் ஒன்று வந்து உள்ளது. அதில் பகுதி நேரமாக ஆன்லைன் வேலை செய்வதற்கு குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து அதில் குறிப்பிடப்பட்டு இருந்த எண்ணுக்கு தீபக் தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது அதில் பேசியவர்கள் தினமும் சில டாஸ்க்களை செய்வதன் மூலம் நல்ல லாபம் பெறலாம் என கூறி உள்ளனர். இதை நம்பிய தீபக் சிறிது சிறிதாக 14 லட்சத்து 12 ஆயிரத்து ,500 ரூபாயை பல்வேறு தவணைகளாக அவர் முதலீடு செய்தார். முதலீடு செய்து பல நாட்களாகி அவருக்கு லாபம் எதுவும் கிடைக்கவில்லை .மேலும் முதலீடு செய்த பணத்தையும் திருப்பிப் பெற முடியவில்லை. தொடர்ந்து தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த தீபக் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.