மதுரையில் பல்வேறு சேவைகளை செய்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு மனிதநேய செம்மல் விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக மகளிர் திருவிழா மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக அரங்கில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பெண்களுக்கு சிங்கப்பெண்கள் விருதுகள் வழங்கும் விழா மற்றும் இலவச பொது மருத்துவ முகாமும், அக்னி சிறகுகள் பவுண்டேசன் சார்பாக தொழில் முனையும் பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
மேலும் சமையல், ஓவியம்,மாறுவேடம், உங்கள் சாய்ஸ், மெகந்தி, தனி நடனம்,குழு நடனம் ,
என்னுயிர் தோழி , ஸ்பாட் கேம்ஷோ போன்ற போட்டிகள் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர். இவ்விழாவிற்கு நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் , மதுரை மாவட்ட சமூகநல அலுவலர் திலகம், துணை ஆட்சியர் செய்யது முகம்மது, இந்திய வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சாமித்துரை, ரஜினி மன்ற நிர்வாகி பாலதம்புராஜ், காவல் ஆய்வாளர் வசந்தா, உட்பட பலரும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களின் பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி மனிதநேய செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு கல்ச்சுரல் அகாடமி டிரஸ்ட் நிறுவனர் செயலாளர் விஜயபாரதி ஏற்பாடு செய்திருந்தார்.
மதுரை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குருவுக்கு மனிதநேய செம்மல் விருது வழங்கி கௌரவிப்பு..!
