மருதமலை முருகன் கோவிலில் மகா கார்த்திகை தீபம் ஏற்றம்.!!

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பல்லக்கில் எழுந்தருளினார். பின்னர் திரு வீதி உலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மலைக் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது  அங்கு கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என்று பக்தி முழக்கமிட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்..