2023ஆம் ஆண்டிற்கான ஜி7 உச்சி மாநாடு ஜப்பான் நாட்டில் உள்ள ஹிரோஷிமாவில் நேற்று தொடங்கியது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.
மேலும் சிறப்பு விருந்தினராக இந்திய பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதைத்தொடர்ந்து மாநாடு நடைபெற்ற ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஜப்பானில் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த எனக்கு மகாத்மா காந்தியின் சிலையை திறக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் ஹிரோஷிமாவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை அகிம்சை சிந்தனையை முன்னெடுத்துச் செல்லும். மக்கள் இங்கு வரும்போது அமைதியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வார்கள். மேலும் மகாத்மா காந்திக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.