கோவை மாநகர சிறப்பு நுண்ணறிவு பிரிவு ( எஸ். ஐ .சி )உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பார்த்திபன். இவர் கோவை மாநகர நூண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராகவும், பின்னர் சிங்காநல்லூர் சட்டம் – ஒழுங்கு உதவி போலீஸ் கமிஷனராகவும் மாற்றப்பட்டார். இந்த இடம் காலியாக இருந்தது. அவருக்கு பதிலாக சிறப்பு நுண்ணறிவு பிரிவு புதிய உதவி போலீஸ் கமிஷனராக மகேஸ்வரன் நியமிக்கப்பட்டு இன்று பொறுப்பேற்றார் .இவர் இதற்கு ஊட்டியில் டவுன் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே கோவை ஆர். எஸ் புரம் ,போத்தனூர், சிங்காநல்லூர் காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார். போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை போலீஸ் கமிஷனர்களிடம் வாழ்த்து பெற்றார்.
கோவை சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக மகேஸ்வரன் இன்று பொறுப்பேற்பு.
