கோவை கோவில் அருகே ஆண் சடலம் மீட்பு..

கோவை உக்கடம் பூ மாரியம்மன் கோவில் அருகே நேற்று 50வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தெற்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பவித்ரா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரவி சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.