கோவை ஏப் 29 கோவை குனியமுத்தூர் போலீசார், அந்த பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1, கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் குனியமுத்தூர் இடையர்பாளையம் ஸ்ரீராம் நகர், கருவேப்பிலை தோட்டத்தைச் சேர்ந்த ஹக்கீம் என்ற கொரில்லா ஹக்கீம் ( வயது 51) என்பது தெரிய வந்தது .இவர் அந்த பகுதியில் தங்கியுள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்தது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் கைது.
