கோவை வடவள்ளி சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 40) இவர் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் பணியை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வந்தார்.கொடிய விஷம் கொண்ட பாம்புகளை கூடபிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி தொண்டாமுத்தூர் நால்ரோடு குடியிருப்பு பகுதிக்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த தகவலின் பேரில் சந்தோஷ் அங்கு சென்றார். அவர் அங்கு பதுங்கி இருந்த நாகப்பாம்பு லாவகமாக பிடிக்க முயன்றார். .அப்போது திடீரென்று அந்த பாம்பு அவரை கடித்தது .உடனே அவரை அக்கம் பக்கம்உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் சந்தோஷ் நேற்று இரவு இறந்தார். பாம்பு கடித்து பாம்பு பிடி வீரர் ஒருவர் பலியானசம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோஷுக்கு திருமணம் ஆகிமனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
20 ஆண்டுகளாக பாம்பு பிடித்து சாதனை படைத்தவர் பாம்பு கடித்து பலி..
