கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பெண் ஒருவர் இன்ஜினியரிங் முடித்து வீட்டில் இருந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.. இவரிடம் கடந்த 18.11.2024 அன்று அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என்றும் உங்களுக்கு கூரியரில் போதை பொருள் வந்துள்ளது. அதுகுறித்த விசாரணைக்கு வீடியோ அழைப்பில் வாருங்கள் என்று கூறினார். இதனை நம்பிய அந்த பெண் வீடியோ அழைப்பில் அவரிடம் பேசினார். அப்போது போலீஸ் அதிகாரி போல் உடை அணிந்து பேசி அந்த ஆசாமி வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறு கூறினார் .அந்த விவரங்களை அந்த பெண் கூறியதும் வங்கி கணக்கில் உள்ள பணத்தை நான் கூறும் வங்கி கணக்கு அனுப்பி வைக்குமாறு விசாரணை முடிந்ததும் திருப்பி அனுப்பி விடுவதாக கூறினார். இதனால் தன் வங்கி கணக்கில் இருந்த ரூ. 10 லட்சத்தை அந்த ஆசாமி கூரிய வங்கி கணக்குக்கு அந்த பெண் அனுப்பி வைத்தார் உடனே அந்த ஆசாமி வீடியோ அழைப்பு துண்டித்து விட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார் விசாரணையில் டெல்லி கோவிந்தபுரியில் தனியார் நிறுவனங்களை நடத்தி வந்த கோபி குமார் (வயது 42) என்பவர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது .இதை தொடர்ந்து தனிப்படை போலீசார் கடந்த ஜனவரி மாத 22 ஆம் தேதி டெல்லி சென்று கோபிகுமாரை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். அவர் நாடு முழுவதும் இதுபோன்று பலரிடம் மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 10 சிம்கார்டுகள், 6 செல்போன்கள் 7 ஏ.டி.எம் கார்டுகள், காசோலை புத்தகங்கள் பென்டிரைவ்கள், உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை கோவை 4-வது ஜூடிசியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. போலீசார் அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்தனர் .வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார் மோசடியில் ஈடுபட்ட போலி போலீஸ் அதிகாரி கோபி குமாருக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து, 50ஆயிரம் அபராதமும் வழங்கி தீர்ப்பு கூறினார் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட 55 நாட்களில் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, நீதிமன்ற ஏட்டு அலெக்ஸ் பாண்டியன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் பாராட்டினார்..
போலீஸ் அதிகாரியாக நடித்து கோவை ஐ.டி.பெண் ஊழியரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவருக்கு 6 ஜெயில்.!!
