திருப்பூர் பக்கம் உள்ள கணியாம்பூண்டி, ஜெயபிரியா நகரை சேர்ந்தவர் ரவி .இவரது மகள் ஸ்ரீநிதி (வயது 25) இவருக்கு கல்வீரம்பாளையம், முருகன் நகர், நேரு வீதியில் வசிக்கும் சிவப்பிரகாசம் (வயது 45) என்பவர் அறிமுகமானார் . இவர் ஸ்ரீ நிதியிடம் வேலை வாங்கி தருவதாகவும், பள்ளிக்கூட சான்றிதழ்களுடன் தன் வீட்டுக்கு வருமாறு கூறினார். இதை நம்பி ஸ்ரீநிதி நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு சென்றார்.பின்னர் கதவை தாழ் போட்டு விட்டு ஸ்ரீ நிதியை கட்டிப்பிடித்து மானபஙகம் செய்ய முயன்றாராம். அவர் பிடியிலிருந்து தப்பி ஓடி வீட்டில் உள்ள பாத்ரூமில் ஒழிந்து கொண்டார்.செல்போன் மூலம் பாத்ரூமில் இருந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து ஸ்ரீநிதியை மீட்டனர்..இதுகுறித்து மேற்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் சிவப்பிரகாசத்தை கைது செய்தார்.இவர் மீது மானபங்கம் உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
வேலை வாங்கித் தருவதாக இளம்பெண் மானபங்கம் – வாலிபர் கைது..!
