நடுரோட்டில் பெண் மானபங்கம் – இளைஞர் கைது…!

கோவை வடவள்ளிஅருகே உள்ள நவாவூர் பிரிவு, அருணாச்சலம் வீதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 30) டைட்டல் பார்க்கில் பெண் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் , இவர் நேற்று மாலை வடவள்ளி – மருதமலை ரோட்டில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது குழந்தையை கூட்டிக் கொண்டு நடந்து வந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி திடீரென்று சண்முகப்பிரியாவை கையை பிடித்து இழுத்தார். அவர் சத்தம் போட்டதால் அவர் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து அந்த ஆசாமியை மடக்கி பிடித்து வடவள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி பக்கமுள்ள சிதம்பரபுரத்தைச் சேர்ந்த மாணிக்கராஜ் மகன் சோபினேஷ் வயது ( 19 ) என்பது தெரிய வந்தது.. இவர் தற்போது வடவள்ளி திருவள்ளுவர் நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..