கோவை : தமிழக எல்லைப் பகுதியான கேரள மாநிலம் வயநாடு மற்றும் நீலகிரி மாவட்ட பகுதியில் சுற்றி திரிந்தவர் மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சோமன் (வயது 40) இவரை தமிழ்நாடு கேரளா எல்லையில் கேரளா போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.. இவர் மீது தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் 66 வழக்குகள் உள்ளது. இவரை பாலக்காட்டில் உள்ள ரகசிய இடத்தில் வைத்து தீவிரவாத எதிர்ப்பு படையினர் மற்றும் உளவுத்துறை போலீசார் விசாரித்து வருகிறார்கள். கோவையில் இருந்தும் உளவுத்துறை போலீசார் பாலக்காடு விரைந்து உள்ளனர்..