கோவை மதுக்கரை பக்கம் உள்ள அரிசிபாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 38) விவசாயி.இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் ஜாதக பொறுத்தம் சரி இல்லாததால் திருமணம் தாமதமானது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சண்முகவேல் நேற்று அவரது பண்ணை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் வேலுமணி மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
ஜாதக பொருத்தம் சரி இல்லாததால் திருமணம் தாமதம் – விவசாயி தற்கொலை..
