திருப்பூர் மத்திய பகுதி போலீசார் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஆண்டிபாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள காட்டுப் பகுதியில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கறுப்பு துணியால் முகத்தை மூடிய நிலையில் கையில் அரிவாள் கத்தி ,இரும்பு கம்பி கட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கருவம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் ( 22) மற்றொரு மணிகண்டன் (24) வீரபாண்டி கவுதம் (23) ரகுராம் (20) ஜெயராம் (26) சூரிய பிரகாஷ் ( 23 ) என்பது தெரிய வந்தது. இவர்கள் 6 பேரும் அந்த வழியாக வரும் நபர்களை தாக்கி கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.
முகமூடி கொள்ளை கும்பல் 6 பேர் கைது – கத்தி, அரிவாள் பறிமுதல்..!
