சத்தியமங்கலம் : பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வட்டாரத்திற்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 16 குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள், காது கேட்கும் கருவி ஐந்து பேருக்கும், முகாமில் புதிய அடையாள அட்டை 20 பேருக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக
முகாமினை பவானிசாகர் பேரூராட்சி தலைவர் மோகன் துவக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் கோதை செல்வி ஆகியோர் பார்வையிட்டு நலத்திட்டங்களை வழங்கினர்.