Microsoft Windows கோளாறு… ஆதி காலத்துக்கே திரும்பிய மக்கள்… திணறும் வங்கிகள், ஐடி, விமான நிறுவனங்கள்.!!

சென்னை: மைக்ரோசாப்ட் செயலிழப்பு (Microsoft outraged ) காரணமாக, விமான நிலையங்களில் சர்வர்கள் டவுன் ஆனதால் போர்டிங் பாஸ்கள் கைகளால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளன. விமான சேவையில் காலை 11 மணி முதலே பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் 27 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் செயலிழப்பால் சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பயணச் சீட்டு பதிவு, இணைய சேவை பணிகள் தாமதமாவதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் கைகளில் எழுதி கொடுக்கப்படுகின்றன.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் செயலிழந்துவிட்டதால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மைக்ரோசாப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது. இதனால் மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, அமேசான் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேரில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர்களில் Blue screen of Death Error ஏற்பட்டுள்ளது. அதாவது உங்கள் சாதனம் சிக்கலில் உள்ளதாக குறிப்பிட்டு ஆபரேட்டிங் சிஸ்டமே முடங்கிவிட்டது.

விண்டோஸ் எக்பியில் தற்போது 11 ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல புதிய அப்டேட்டுகளுடன் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதற்காக தொழில்நுட்ப ரீதியில் பல வரவேற்புகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில் இந்த செயலிழப்பு குறித்து பல நெட்டிசன்கள் நீல நிற ஸ்கிரீனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் வார இறுதிக்கு முந்தைய நாள் மைக்ரோசாப்ட் கூடுதலாக ஒரு விடுமுறை கொடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனமும் கூறியிருப்பதாவது: பயனர்கள் பல்வேறு மைக்ரோசாப்ட் செயலிகள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். பிரச்சினையைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் தற்போது வரை சாதகமான முடிவுகளே கிடைத்து வருகின்றன. இந்த சிக்கல் படிப்படியாக விரைவில் சரியாகும்” என தெரிவித்துள்ளனர்.

நீல நிற ஸ்கிரீன் என்பது சாப்ட்வேரே செயலிழந்ததை குறிக்கிறது. அதாவது விண்டோஸ் இயங்குதளம் ஆபத்தான நிலையில் உள்ளது. இனி அதில் பாதுகாப்பாக செயல்பட முடியாது என்பதைத்தான் Blue screen of Death என்கிறார்கள்.