தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரிகளுக்கு ரூ.138 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குவாரிகளில் ரூ.92.56 கோடி மதிப்பில் கனிம வளக் கொள்ளை நடந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
தேனி மாவட்டத்தில் அதிக அளவில் மண் மற்றும் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. அந்த குவாரிகளில் அளவீட்டை காட்டிலும் அதிக அளவில் கனிமவள கொள்ளை நடைபெற்றுவருவதாக சேதுராம் என்ற தனிநபர் 2020-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவுற்றது.
அந்த விசாரணை அறிக்கையில்:
2021-ம் ஆண்டு தேனி மாவட்ட நிர்வாகமும், கனிம வளத்துறையும் இணைந்து இந்த குவாரிகளை ஆய்வு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் கனிம வளகொள்ளை நடைபெற்றிருந்தால் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அப்போது அதன் ஆய்வு குழுவாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இருந்து தொழில்நுட்ப பிரிவினர் வந்து ஒவ்வொரு குவாரிகளாக தனித்தனியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அளவுக்கு அதிகமாக கல் மற்றும் கிராவல் மண் வெட்டியெடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதற்கான அபராதத்தொகை ரூ.92.56 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது.
விசாரணை முடிவுற்ற நிலையில் தற்போதைய சார் ஆட்சியர் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரிகளுக்கும் ரூ.138.4 கோடி அபராதம் விதித்துள்ளார்.