கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு காரில் இருந்த சிலிண்டர் மற்றும் மர்ம பொருட்கள் வெடித்ததில் கோட்டை மேட்டை சேர்ந்த ஜமேஷாமு பின் என்பவர் அதே இடத்தில் பலியானார்.இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் அவரது வீட்டில் இருந்த 75 கிலோ வெடிபொருட்கள், கேன்கள், முக்கியதஸ்தா வேஜிகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது கூட்டாளிகள் உறவினர்கள் என 6பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர் .என்.ஐ.ஏ.டி. ஐ. ஜி, எஸ். பிஉட்பட 14 அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் இன்று மதியம் நடந்தது.இதில் கோவையில் நடந்த சம்பவம் தொடர்பாக புலன் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.மேலும் நகரில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஜி. எஸ். சமீரன் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் .மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை போலீஸ் கமிஷனர்கள், உதவி போலீஸ் கமிஷனர்கள் பங்கேற்றனர்.