வால்பாறை மகளீர் விடுதிகள் மற்றும் பள்ளியை அமைச்சர் திடீர் ஆய்வு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கல்லூரி மகளீர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, கக்கன்காலனி உண்டி உறைவிடப் பள்ளி மற்றும் அண்ணா நகர் அரசு மாணவியர் தங்கும் விடுதி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்க் கொண்ட தமிழ் நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உடனிருந்த வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகராட்சி ஆணையாளர் ரகுராமன்,நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் மாணவ மாணவிகளிடம் விடுதிகளில் வழங்கப்படும் உணவுகள் பற்றியும், விடுதிகளின் நிலை மற்றும் குறைகளை கேட்டறிந்து ஒவ்வொரு விடுதியிலும் சமைத்த உணவுகளை சாப்பிட்டு பார்த்து சம்பந்தப்பட்ட காப்பாளர்களிடம் அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்க் கொள்வதாகவும் உறுதியளித்தார் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் இந்நிகழ்வின் போது நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்