சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும் நாளையும் பிரச்சாரம் செய்கிறார்.
குமலன்குட்டை, கணபதிநகர், நாராயணவலசு, இடையன்காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் மாலை பிரச்சாரம் செய்கிறார். பழனிமலை வீதி, கமலா நகர், பம்பிங் ஸ்டேசன் ரோடு, வீரப்பன்சத்திரம் பகுதிகளிலும் இன்று மாலை பிரச்சாரம் செய்யவுள்ளார். நாளை மாலை எஸ்.கே.சி.ரோடு, கிராமடை, மணல்மேடு, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.