அமைச்சரின் சர்ச்சை கமெண்ட்… திருச்சி லால்குடி திமுக எம்எல்ஏ ராஜினாமா..?

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சௌந்தர பாண்டியன் அவரின் தொகுதியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் தன்னை அமைச்சரும் அதிகாரிகள் யாரும் கூப்பிடாமல் விழா நடத்தி என்னை கேவலப்படுத்துகிறார்கள் என்று உள்ளக் குமுறலை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் அமைச்சர் கே.என்.நேருவின் சமூக வலைதள பதிவின் கீழ் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இயற்கை எய்திவிட்டதால் லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் அறிவிப்பு போட்ட விவகாரம் திருச்சி மாவட்ட திமுகவில் பரபரத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்கள் இதுகுறித்து அமைச்சர் கே என் நேருவிடம் கேட்டபோது எம்.எல்.ஏ-விடம் பேசிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.
சமூக வலைதள பதிவில் லால்குடி சட்டமன்ற உறுப்பினரான சௌந்தரபாண்டியன் நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். கே.என்.நேருவின் ஆதரவாளரான இவருக்கு ஆரம்பத்தில் சீட் பெற்றுக் கொடுத்தது கே.என்.நேருதான். இந்நிலையில் சில வருடங்களாக சௌந்தரபாண்டியனை அவர் ஓரங்கட்டுவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அமைச்சர் கே.என்.நேருவின் தொடர் பாராமுகம் அவரை குமுற வைத்தது.
இந்த சூழலில், லால்குடியில் புதிதாக கட்டப்படும் தாலுக்கா அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் அமைச்சர் நேருவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அந்த பதிவில் தான் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் இயற்கை எய்திவிட்டதால், லால்குடி தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டது என்று கமெண்ட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான அதுவும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரான தன்னை அழைக்காமல் இப்படி ஓரங்கட்டுகிறார்கள் என்ற கோபத்தில் அப்படி கமெண்ட் போட்டு தனது உள்ளக்குமுறலை அவர் வெளிப்படுத்தியதாக அவர் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் கே.என்.நேருவின் அந்த பதிவில் சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் பதிவிட்ட சர்ச்சைக்குரிய அந்த அறிவிப்பு உடனேயே நீக்கப்பட்டது.
அந்த கமெண்டை நீக்கியது அமைச்சர் கே.என்.நேரு தரப்புதான் என்று சௌந்தரபாண்டியன் தரப்பு குற்றம்சாட்டியது கே.என்.நேருவின் இந்த பாராமுகத்தை கட்சி தலைமையும் கண்டுக்கொள்ளவில்லை. அதனால் அண்ணன் ராஜினாமா பண்ண முடிவு செய்து கடிதம் கொடுக்க இருக்கிறார் என்று சௌந்தரபாண்டியன் முடிவுசெய்திருப்பதாக ஒரு தகவல் திருச்சி மாவட்ட தி.மு.க-வில் மிகவும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.இதுகுறித்து திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம் இந்த விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு இந்த விவகாரம் தொடர்பாக லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனை அழைத்துப் பேசிவிட்டேன்” என்றவரிடம், சௌந்தரபாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்ய கடிதம் கொடுக்க இருக்கிறாராமே?” என்று கேள்வி எழுப்பியதற்கு பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். அமைச்சர் நேரு தொடர்ந்து சௌந்தரபாண்டியன் எம் எல் ஏ வை உதாசீனப்படுத்தி வருகிறார். மேலும் அதிகாரிகள் யாரும் அவரிடம் சென்று எந்த ஒரு ஆய்வுக்கும் கூப்பிடக்கூடாது என்று வாய்மொழியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக உடன்பிறப்புகள் பேசிக் கொள்கிறார்கள். எது எப்படியோ திருச்சி மாவட்ட திமுகவில் அவ்வப்போது சர்ச்சை வெடித்துக் கொண்டே இருக்கிறது.