கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டையில் 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க முயன்றதாக பொன்முடி மீது புகார் எழுந்ததுபோலி ஆவணங்களை தயாரித்து பொன்முடி, தனது மாமியார் சரஸ்வதி பெயரில் 35 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் பொன்முடி உள்ளிட்ட 10 பேர் மீது 2004 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 2007 ஆம் ஆண்டு பொன்முடி உள்ளிட்டோரை விடுவித்தது.
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உயர் நீதிமன்றம் வழக்கை மீண்டும் நடத்த உத்தரவிட்டது.இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று தீர்பு வழங்கப்பட்டது.
அரசு சார்பில் பொய்யான ஆவணம் தயாரித்தற்கான போதிய சான்றாதாரம் சமர்பிக்கவில்லை என்று கூறிய நீதிபதி, குற்றம் நிரூபணம் ஆகவில்லை என்று தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் பொன்முடி உள்பட அனைவரையும் விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.