கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:கோவை 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில்பின்புறம் உள்ள சிறிய துவாரம் வழியாக புகுந்து 4 கிலோ 573 கிராம்573 கிராம் தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 5 தனிபடைகள் அமைக்கப்பட்டது.இதில் உதவி கமிஷனர் கணேஷ்,இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், மீனாம்பிகை, செந்தில்குமார், ராஜேஷ்,மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் போலீசார் இடம் பெற்றிருந்தனர்.இவர்கள் தீவிரமாக துலக்கி கொள்ளையன் யார் ?என்பதை அடையாளம் கண்டனர்.ஆனைமலையில் பிடிக்க முயன்றபோது வீட்டில் ஓட்டை பிரித்து வெளியே குதித்து கொள்ளையன் விஜய் தப்பி சென்று விட்டான்.அவரது மனைவி நர்மதா விடம் கொடுத்து வைத்திருந்த 3 கிலோ தங்க -வைர நகைகள் மீட்கப்பட்டது.மேலும் அவரது மாமியார் யோக ராணி தர்மபுரியில் உள்ள அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 கிலோ 35 கிராம் தங்க வைர நகைகளை போலீசார் நேற்று மீட்டனர்.தலை மறைவாக உள்ள கொள்ளையன் அஜய்யை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.இன்னும் 235 கிராம் நகைகள் மற்றும் மீட்கப்பட வேண்டியது உள்ளது.இதில் 2 கைச்செயின், 2 தங்க மோதிரம்,ஒரு செயின் ஆகியவற்றை கொள்ளையன் அஜய் உடலில் அணிந்து உள்ளான்.கொள்ளையனை பற்றி முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அவனை பிடித்து விடுவோம்.அவனைப் பிடித்த பிறகு தான் நகை கடையில் பின்புறம் துவாரம் இருப்பதையும், கொள்ளையடிப்பதற்கு உகந்த கடை என்பதையும் இவனுக்கு யார்? தகவல் கொடுத்தார்கள். என்பதை பற்றிய விவரம் தெரியும்.இவ்வாறு அவர் கூறினார்.